சமீபத்திய ஆய்வின்படி இந்தியாவில் பல லட்சம் முஸ்லிம் வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி உள்ளனர். அதில் தமிழகத்தில் மட்டும் சுமார் 12 லட்சம் முஸ்லிம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தாவூத் மியாகான் தலைமையில் முஸ்லிம் தலைவர்களை கொண்ட பல்வேறு கருத்து
கேட்பு கூட்டம் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக 2/7/2018 அன்று சென்னை SIET கல்லூரியில் அமைந்துள்ள அகாடமி ஹாலில் ” Electrol Reforms” என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் பல்வேறு தலைவர்களும் கலந்து கொண்டனர் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் மாநிலச் செயலாளர் என்.ஏ தைமியா மாநிலத் துணைச் செயலாளர் புதுமடம் அனிஸ், மாணவர் இந்தியா மாநிலச் செயலாளர் அ.முஹம்மது அசாருதீன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
முஸ்லிம் வாக்காளர்களின் பெயர்களை குறிவைத்து எவ்வாறு நீக்குகின்றனர் என்பது குறித்து தாவூத் மியாகான் தொடக்க உரையாற்றினார்.
சச்சார் கமிட்டியின் முன்னாள் செயலாளர் அபுசாலிஹ், தென்னிந்திய கல்வி அறக்கட்டளை சேர்மன் மூசா ரசா IAS, மற்றும் முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி S.Y.குரேஷி IAS ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_தலைமையகம்